ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் இருந்து ரபேல் நடால் விலகல் : தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகுவதாக அறிவிப்பு
Jan 8 2024 2:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரபேல் நடால் காயம் காரணமாக ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் இருந்து விலகியுள்ளார். ஸ்பெயினின் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரரான ரபேல் நடாலுக்கு, பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர் போட்டியின்போது தசையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக வரும் 14ம் தேதி தொடங்கும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இதுவரை 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான நடால், கடந்த 2009 மற்றும் 2022ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபனை தன்வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.