இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிப்பு : டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவித்தார்

Jan 9 2024 1:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தமிழகத்தை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் வைஷாலி ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் அர்ஜூனா விருது, துரோணாச்சாரியார் விருது, தயான் சந்த் உள்ளிட்ட விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில், டெல்லி ராஷ்டிரபதி பவனில் விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அர்ஜூனா விருதினை வழங்கி கவுரவித்தார்.

தமிழகத்தை சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரியும், தமிழகத்தின் முதல் கிராண்ட்மாஸ்டர் வீராங்கனையுமான வைஷாலிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தார்.

இதேபோல், உலகளவில் சாதிக்கும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியார் விருதை, பிரக்ஞானந்தா போன்று பல செஸ் வீரர்களை உருவாக்கிய தமிழக செஸ் பயிற்சியாளர் ஆர்.பி. ரமேஷுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.

தொடர்ந்து, வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருது தமிழகத்தின் முதல் கபடி வீராங்கனையான கவிதா செல்வராஜ் மற்றும் மஞ்சுஷா கன்வார், வினீத் குமார் ஷர்மா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மூவருக்கும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00