புரோ கபடி லீக் போட்டியில் தபாங் டெல்லி அணி வெற்றி : 40-34 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி அசத்தல்
Jan 9 2024 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரோ கபடி லீக் போட்டியில் யு மும்பா அணியை வீழ்த்தி தபாங் டெல்லி அணி வெற்றி பெற்றது. 10வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றுள்ளன. மும்பையில் நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் யு மும்பா அணியும், தபாங் டெல்லி அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 40-34 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி பெற்றது.