அர்ஜூனா விருது பெற்றது தனது வாழ்வின் மிகப்பெரிய சாதனை என முகமது ஷமி பெருமிதம் : சிறப்பான ஆட்டத்தை வெளியப்படுத்திய ஷமிக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிப்பு
Jan 9 2024 4:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அர்ஜூனா விருது பெற்றது தனது வாழ்வின் மிகப்பெரிய சாதனை என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். உலக கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டது. அதன்படி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாட்டின் 2வது உயரிய விருதினை வழங்கினார். அதனை பெற்றுக் கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த முகமது ஷமி, தனது வாழ்நாளில் மிகப்பெரிய சாதனை இது என பெருமிதம் தெரிவித்தார்.