இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி : ஸ்விட்சர்லாந்து வீரர்களான வாவ்ரிங்கா - ரோஜர் பெடரர் மோதல்

Mar 19 2017 4:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், ஸ்விட்சர்லாந்து வீரர்களான வாவ்ரிங்கா மற்றும் ரோஜர் பெடரர் ஆகியோர் மோதுகின்றனர்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், இந்தியன் வெல்ஸில் நடைபெற்றுவரும் ஓபன் டென்னிஸ் போட்டிகள், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில், தரவரிசை பட்டியலில் 10வது இடத்தில் உள்ள ஸ்விசர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மற்றும் அமெரிக்க வீரர் ஜாக் சாக் ஆகியோர் மோதினர். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரரை ரோஜர் பெடரர் தோற்கடித்தார்.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில், தரவரிசை பட்டியலில் 3வது இடத்தில் உள்ள வாவ்ரிங்கா மற்றும் ஸ்பெயின் வீரர் Carreno Busta ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் 6-3, 5-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரரை தோற்கடித்த வாவ்ரிங்கா, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதனிடையே, பரபரப்பான இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த வாவ்ரிங்கா மற்றும் ரோஜர் பெடரர் மோத உள்ளனர். இதேபோல், மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், பிரான்ஸ் வீராங்கனை வெஸ்னினா, சகநாட்டு வீராங்கனை குஸ்நெட்சோவாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00