Fed கோப்பை டென்னிஸ் போட்டி -செக்குடியரசு அணியை வென்று அமெரிக்கா இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

Apr 24 2017 2:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

Fed கோப்பை டென்னிஸ் அரையிறுதியில், செக்குடிரசு அணியை, 3-2 என்ற கணக்கில் வென்று அமெரிக்கா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற Fed கோப்பை டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றில், அந்நாட்டு அணி - செக்குடியரசு அணியை எதிர்கொண்டது. இதன் முதல் நாளில் நடைபெற்ற ஒற்றையர் சுற்று ஆட்டங்களின் முடிவில், 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றன. இந்நிலையில், நேற்று மாற்று ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. மாற்று ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில், தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் CoCo Vandeweghe, செக்குடியரசின் Katerina Siniakova-வை எதிர்கொண்டார். இப்போட்டியில் ஆரம்பம் முதலே தனது அபார சர்வீஸ்கள் மூலம் செக். வீராங்கனையை திணறடித்த Vandeweghe, 6-4, 6-0 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில், செக்குடியரசின் Marketa Vondrousova, அமெரிக்காவின் Lauren Davis-ஐ 6-2, 7-5 என்ற நேர் செட்கணக்கில் தோற்கடித்தார். இதனால், இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலை பெற்றன.

இதனால் வெற்றியை தீர்மானிக்கும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில், இரு அணிகளும் கடுமையாக மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அமெரிக்க இணை, செக்குடியரசு இணையை 6-2, 6-3 என்ற செட்கணக்கில் தோற்கடித்து அதிர்ச்சியளித்தது. இதன்மூலம், 3-2 என்ற கணக்கில் அமெரிக்கா வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00