பாசிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் : உலகின் முதல் நிலை வீரர் ஆண்டி முர்ரே, ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Apr 29 2017 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

Barcelona Open Tennis தொடரில், உலகின் முதல் நிலை வீரர் ஆண்டி முர்ரே, ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் Barcelona Open Tennis தொடர், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில், நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில், தொடருக்கான தரவரிசைப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரஃபேல் நடால், தென்கொரிய வீரர் Hyeon Chung-ஐ எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 7-6, 6-2 என்ற செட்கணக்கில் நடால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதிப்போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான பிரிட்டனின் ஆண்டி முர்ரேவும், ஸ்பெயினின் ஆல்பல் ராமோஸ் வினோலசும் மோதினர். இப்போட்டியில், முதல் செட்டை 2-6 என்ற கணக்கில் இழந்த முர்ரே, பின்னர் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி, 6-4, 7-6 என்ற கணக்கில் அடுத்த 2 செட்களையும் வென்று வினோலசுக்கு அதிர்ச்சியளித்தார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில், 2-6, 6-4, 7-6 என்ற செட்கணக்கில் முர்ரே வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00