இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டி : வெற்றிபெற இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என இந்திய கேப்டன் விராட்கோலி உறுதி

Jun 17 2017 8:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில், வெற்றிபெற இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என இந்திய கேப்டன் விராட்கோலி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டம், லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இதில், நடப்பு சாம்பியனான இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரப் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி, இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாகப் போராடும் என்றும், அனைத்து வீரர்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்றும் உறுதியளித்தார். மேலும், நாளையப் போட்டி, தங்களுக்கு மற்றுமொரு சாதாரண ஆட்டம்தான் என்றும், முடிவு எப்படியாக இருந்தாலும், அதன்பின்னர் நிறைய ஆட்டங்களில் விளையாட வேண்டும் என்பதால், அதை நோக்கி தாங்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் கேப்டன் கோலி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய கேப்டன் விராட் கோலியும், பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவும் இணைந்து, சாம்பியன்ஸ் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00