மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி - 105 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

Jun 26 2017 8:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 105 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

மேற்குஇந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன், முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், போர்ட் ஆஃப் ஸ்பெயினில் 2-வது போட்டி நடைபெற்றது. மழையின் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரஹானே 103 ரன்களும், தவான் 63 ரன்களும் குவித்தனர். இருவரும் ஆட்டமிழந்ததை அடுத்து, விளையாடி கேப்டன் விராத் கோலி 87 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய, ஹர்திக் பாண்டியா 4 ரன்களும், யுவராஜ் 14 ரன்களும் எடுத்தனர். தோனி மற்றும் ஜதாவ் களத்தில் இருந்த நிலையில் 43 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெடுகள் இழந்து 310 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்குஇந்திய தீவுகள் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய Kieran Powell ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு வீரரான் Shai Hope 81 ரன்கள் எடுத்து, ஆட்டமிழந்தார். ஆனால், அடுத்தடுத்து விளையாடிய Jason Mohammed, Evin Lewis, Jason Holder உள்ளிட்டோர் சொர்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் 43 ஓவர் முடிவில், மேற்குஇந்திய தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்தியா 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0க்கு என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00