பார்முலா-1 கார்பந்தயம் : சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் 263 புள்ளிகளுடன் முதலிடம்

Sep 18 2017 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

பார்முலா-1 கார்பந்தயத்தில் இதுவரை நடந்து முடிந்துள்ள 14 சுற்றுகள் முடிவில், சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில், இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் 263 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

பார்முலா-1 கார்பந்தயம் இந்த ஆண்டு 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 14-வது சுற்றான சிங்கப்பூர் கிராண்ட்ஃபிரி அங்குள்ள மரினா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் 308 புள்ளி 828 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் கார்களில் சீறிப்பாய்ந்தனர். முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 2 மணி 3 நிமிடம் 23 புள்ளி 544 வினாடிகளில் இலக்கை அடைந்து, முதலிடத்தை பிடித்தார். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது. இந்த சீசனில் அவர் பதிவு செய்த 7-வது வெற்றி இதுவாகும்.

ஆஸ்திரேலியாவின் டேனியல் ரிக்கார்டோ 2-வதாகவும், பின்லாந்தின் வால்டெரி போட்டாஸ், 3-வதாகவும் வந்தனர். போர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்று வரும் மெக்சிகோவின் செர்ஜியோ ஃபெரேஸ் 5-வது இடத்தையும், ஃபிரான்சின் ஈஸ்ட்பான் ஒகான் 10-வது இடத்தையும் பிடித்தனர்.

இதுவரை நடந்து முடிந்துள்ள 14 சுற்றுகள் முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 263 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வெட்டல் 235 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். அடுத்த சுற்று போட்டி அக்டோபர் 1-ம் தேதி மலேசியாவில் நடைபெறவிருக்‍கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00