2017-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான FIFA விருது - போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கி கவுரவிப்பு

Oct 24 2017 11:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

2017-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான FIFA விருதினை, போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றார். லண்டனில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட்டது.

சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான FIFA சார்பில், ஆண்டுதோறும் தலைசிறந்த வீரர் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டின் சிறந்த வீரராக போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

லண்டனில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில், நட்சத்திர வீரரான, அர்ஜென்டினாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸியை முந்தி, சிறந்த வீரர் விருதினை ரொனால்டோ பெற்றார். கடந்த 5 ஆண்டுகளில், 4வது முறையாக FIFA விருதை ரொனால்டோ பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஹாலந்து வீராங்கனை Lieke Martens தேர்வு செய்யப்பட்டார். சிறந்த கோல்கீப்பராக கெயின்லுகி பபனும், பயிற்சியாளராக ஜிடேனும் தேர்வு செய்யப்பட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00