இலங்கைக்கு எதிரான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி - 3 போட்டிகள் கொண்ட தொடரையும் வென்றது இந்தியா

Dec 23 2017 10:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கைக்‍கு எதிரான 2-வது டி-20 கிரிக்‍கெட் போட்டியில் இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற புள்ளிக்‍ கணக்‍கில் இந்தியா தொடரை வென்றுள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்‍கு இடையிலான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி, இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திசாரா பேரேரா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள், ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 12-வது ஓவரில் ரோகித் சர்மா 35-வது பந்தில் சதம் அடித்தார்.

டி-20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த டேவிட் மில்லரின் சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்தார். ரோகித் சர்மா 43 பந்தில் 12 பவுண்டரி, 10 சிக்ஸ் உடன் 118 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். லோகேஷ் ராகுல் - ரோகித் சர்மா ஜோடி 165 ரன்கள் குவித்தது. சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் இது அதிபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும். லோகேஷ் ராகுல் 49 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது.

261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை வீரர்கள், நிரோஷன் டிக்வெல்லாவும், உபுல் தரங்காவும் களமிறங்கினர். டிக்வெல்லா 25 ரன்னிலும், தரங்கா 47 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குசல் பெரெரா 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவுட்டாகி வெளியேறினார். 17.2 ஓவர்களில் இலங்கை அணி 172 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன்மூலம் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். சதமடித்து இந்தியாவின் வெற்றிக்‍கு உறுதுணையாக இருந்த கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-0 என்ற புள்ளிக்‍ கணக்‍கில் இந்திய அணி கைப்பற்றியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00