நெல்லை மாவட்டத்தில் உணவுப் பொருட்களை வீணாக்கக் கூடாது என்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Jan 28 2018 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், உணவுப் பொருட்களை வீணாக்கக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அங்கு, மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. இதில், பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், உணவுப் பொருட்களை வீணாக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக, விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டது. அங்குள்ள தூய சவேரியர் கல்லூரியில் இந்த ஓட்டத்தை, அம்மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், இளைஞர்கள், பொதுமக்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் இதில் பங்கேற்றனர். அவர்களுக்கு, 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் என வெவ்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு, அண்ணாநகர் போன்ற பகுதிகள் வழியாக நடைபெற்ற மாரத்தான் ஓட்டம், இறுதியில் தொடங்கிய இடத்திலேயே நிறைவுபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00