காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்‍கங்களை அள்ளிக்‍குவிக்‍கும் இந்திய வீரர், வீராங்கனைகள் - குத்துச்சண்டையில் மேரிகோம் தங்கம் வென்றார்

Apr 14 2018 10:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன் வெல்த் போட்டியில், இந்தியாவிற்கு இன்று, மேலும் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்‍கங்கள் கிடைத்துள்ளன.

ஆஸ்திரேலியாவின் Gold coast நகரில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 10-வது நாளான இன்று, குத்துச்சண்டை, துப்பாக்‍கிச்சுடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மகளிருக்கான 45-48 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இறுதிப்போட்டியில் வடக்கு அயர்லாந்து வீராங்கனை கிறிஸ்டினா ஒஹாராவை 5-0 என வீழ்த்தினார்.

இதேபோல், ஆண்களுக்‍கான 52 கிலோ எடை பிரிவு குத்துச்சண்டை போட்டியில், Gaurav Solanki தங்கப்பதக்‍கம் வென்றார்.

ஆண்கள் துப்பாக்‍கி சுடுதல் போட்டியில், இந்தியாவின் Sanjeev Rajput தங்கப்பதக்‍கம் வென்றுள்ளார். அவர் 454.5 புள்ளிகள் எடுத்து தங்கத்தை பெற்றுள்ளார்.

ஆண்களுக்கான 49 கிலோ குத்துச்சண்டைச் போட்டியில் இந்திய வீரர் அமித் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வீரர் கலால் யபாய், 3-1 என்ற புள்ளிக்கணக்கில் அமித்தை தோல்வியடையச் செய்தார்.

இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில், இந்தியா 20 தங்கம், 12 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00