ஃபின்லாந்த் சர்வதேச தடகள ஜூனியர் சாம்பியன் போட்டி : 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா தங்கம் - விவசாயி மகள் ஹிமா தாசுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

Jul 13 2018 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஃபின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தடகள ஜூனியர் சாம்பியன் பட்டப் போட்டியின் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், இந்தியாவுக்‍கு தங்கம் வென்று தந்த, அஸ்ஸாமை சேர்ந்த விவசாயி மகளான ஹிமா தாசுக்‍கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஃபின்லாந்து நாட்டின் டம்பெரி நகரில் சர்வதேச தடகள கழகத்தின் சார்பில், 20 வயதிற்கு உட்பட்டோருக்‍கான சாம்பியன்ஸ் போட்டி ஜூலை 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கம் பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச ஜூனியர் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை 18 வயதாகும் ஹிமா தாஸ் பெற்றுள்ளார். இதற்கு முன் 2002-ல் சீமா புனியாவும், 2014-ல் நவஜீத் கவுர் தில்லானும் மட்டுமே இந்தியா சார்பில் வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளனர்.

ஹிமா தாஸ், பந்தய இலக்கை 51 புள்ளி நான்கு ஆறு விநாடிகளில் அடைந்துள்ளார். அசாம் மாநிலத்தை சேர்ந்த விவசாயியின் மகளான ஹிமா தாஸ், இந்த போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் வரலாறு படைத்துள்ளார். இவருக்கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், பிரதமர் திரு. மோடி உள்ளிட்டோர் டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஹிமா தாசின் சாதனையால் இந்தியா மகிழ்ச்சியும், பெருமையும் அடைவதாக திரு. மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00