ஆசிய விளையாட்டுப்போட்டியில் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சிந்து வெள்ளிப்பதக்‍கம் வென்றார் - வில்வித்தை குழு பிரிவில் இந்திய ஆடவர், மகளிர் அணிகளுக்‍கு வெள்ளிப் பதக்‍கங்கள் - டேபிள் டென்னிசில் வெண்கலம் வென்றது இந்திய அணி

Aug 28 2018 3:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆசிய விளையாட்டுப்​போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில், நட்சத்திர வீராங்கனை P.V.சிந்து வெள்ளிப்பதக்‍கம் வென்றார். ஆடவர் மற்றும் மகளிர் வில்வித்தை குழு பிரிவுகளில், இந்திய அணிக்‍கு இன்று 2 வெள்ளிப்பதக்‍கங்கள் கிடைத்தன. ஆடவர் டேபிள் டென்னிஸ் போட்டியில், முதல் முறையாக வெண்கலப்பதக்‍கம் வென்று இந்திய அணி சாதனை படைத்தது. இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய வீரர் - வீராங்கனைகள் தொடர்ந்து பதக்‍கங்களை குவித்து, இந்தியாவுக்‍கு பெருமை சேர்த்து வருகின்றனர். Jakarata-வில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் இறுதியாட்டத்தில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை P.V.சிந்து, சீனாவின் டய் சூ யிங்கை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 13-20, 16-21 என்ற செட்கணக்‍கில் P.V.சிந்து போராடி தோல்வியடைந்ததார். தங்கப்பதக்‍கம் வென்று P.V.சிந்து சாதனைப்படைப்பார் என்று எதிர்பார்க்‍கப்பட்ட நிலையில், அவருக்‍கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஆடவர் வில்வித்தை குழு பிரிவு இறுதிச்சுற்றில், Abhishek Verma, Rajat Chauhan மற்றும் Aman Saini ஆகியோர் அடங்கிய இந்திய அணி தென்கொரியாவுடன் மோதியது. இறுதிவரை கடும் போட்டி நிலவிய இந்தப் போட்டியில், இரு அணிகளும் தலா 229 புள்ளிகள் பெற்றதால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் Shoot Off முறையில் தென்கொரியா வெற்றிபெற்றது. இதன்மூலம் நூலிழையில் தங்கத்தை பறிகொடுத்த இந்தியா வெள்ளிப்பதக்‍கமே வென்றது. இதேபோல், மகளிர் வில்வித்தை குழு பிரிவிலும் இந்திய அணிக்‍கு வெள்ளிப்பதக்‍கம் கிடைத்தது. இறுதிச் சுற்றில் இந்தியாவின் Muskan Kirar, Madhumita Kumari மற்றும் Jyothi Surekha ஆகியோர் அடங்கிய அணி, தென்கொரியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 231 - 228 என்ற புள்ளி கணக்‍கில் தென்கொரியா வெற்றிபெற்றது. இதனால் இந்தியஅணிக்‍கு வெள்ளிப் பதக்‍கம் கிடைத்தது. ஆடவருக்‍கான டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்திய அணி, கொரிய அணியை எதிர்கொண்டது. இதில், 3-க்‍கு பூஜ்ஜியம் என்ற கணக்‍கில் இந்திய அணி தோல்வியடைந்து, வெண்கலப்பதக்‍கத்தை பெற்றது. இதன்மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், டேபிள் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக இந்திய அணி பதக்‍கம் வென்று அசத்தியது. (JP-TableTennis) இதன்மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய அணி, 8 தங்கம், 16 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 45 பதக்‍கங்களுடன் 9-வது இடத்தில் உள்ளது. 88 தங்கம் உட்பட 193 பதக்‍கங்களுடன் சீனா முதலிடத்தை தக்‍கவைத்துக்‍ கொண்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00