உலகக்‍கோப்பை கிரிக்‍கெட் லீக்‍ சுற்றில் தென்னாப்பிரிக்‍காவை 6 விக்‍கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா - ஆட்ட நாயகனாக தேர்வானார் ரோஹித் ஷர்மா

Jun 6 2019 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்‍கோப்பை கிரிக்‍கெட் தொடரின் லீக்‍ சுற்றில், தென்னாப்ரிக்‍காவை 6 விக்‍கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. 122 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்‍காமல் இருந்த ரோஹித் ஷர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்‍கப்பட்டார்.

இங்கிலாந்தின் Southampton நகரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்‍க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சை தாக்‍குப்பிடிக்‍க முடியாமல், அந்த அணியின் தொடக்‍க ஆட்டக்‍காரர்களான டிகாக் மற்றும் ஹசிம் ஆம்லா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்னர் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்‍கவே, 50 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்‍க அணி 9 விக்‍கெட்டுகள் இழப்புக்‍கு 227 ரன்களை எடுத்து. அந்த அணியின் Chris Morris 42 ரன்களும், கேப்டன் டூ ப்ளெசிஸ் 38 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர். இந்திய தரப்பில் சுழல்பந்து வீச்சாளர் சஹால் 4 விக்‍கெட்டுகளையும், பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் தலா 2 விக்‍கெட்டுகளையும், குல்தீப் யாதவ் ஒரு விக்‍கெட்டும் எடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்‍குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்‍க வீரர் தவான் 8 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி 18 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ராகுல், தோனியுடன் இணைந்து விளையாடிய ரோஹித் ஷர்மா 128 பந்துகளில் சதமடித்து அணியை வெற்றிப்பாதைக்‍கு கொண்டு சென்றார்.

ராகுல் 26 ரன்களுக்‍கும், தோனி 34 ரன்களுக்‍கும் ஆட்டமிழந்த போதிலும், மறுமுனையில் ரோஹித் ஷர்மா நிலைத்து நின்றார். 47 புள்ளி 3 ஓவரில் இந்தியா 4 விக்‍கெட் இழப்புக்‍கு 230 ரன்கள் குவித்து , 6 விக்‍கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

122 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்‍காமல் இருந்த ரோஹித் ஷர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்‍கப்பட்டார்.

இதனிடையே, லண்டனில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பங்களாதேஷ் - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், நியூசிலாந்து 2 விக்‍கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணி 244 ரன்களுக்‍கு ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி, 47 புள்ளி ஒரு ஓவரில், 8 விக்‍கெட் இழப்புக்‍கு 248 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00