வூஹான் நகரில் மீண்டும் நாய், வவ்வாள் உள்ளிட்ட விலங்குகளின் விற்பனை அமோகம் - உலக நாடுகளை அதிர்ச்சி

Mar 31 2020 10:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

வூஹான் நகரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அங்கு மீண்டும் நாய், வவ்வாள் உள்ளிட்ட விலங்குகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவில் ஹூபே மாகாணத்தில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உகானில் தொடங்கிய தொற்று நோய் உலக நாடுகளை ஊரடங்கிற்குள் தள்ளியுள்ளது. சீனாவில் கடந்த 2 மாத ஊரடங்கிற்கு பிறகு தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து உள்ளது. ஹூபே மாகாணம் முழுவதும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இதனை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அங்கு ஊரடங்கை தளர்த்தி சீனா அங்கு இயல்பு நிலையை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது.

தொழிற்சாலைகளும், கடைகளும் வணிக நிறுவனங்களும் மீண்டும் திறக்கப்பட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு சீனாவின் குயிலின் நகரில் உள்ள சந்தை திறக்கப்பட்டதால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் திரண்டிருந்தனர். அப்போது நாய், வவ்வால், பன்றி உள்ளிட்டவைகள் இறைச்சியாகவும், உயிருடனும் விற்கப்பட்டது. இந்த காட்சிகள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தங்களுடைய செயலால் உலக நாடுகள் சிரமப்படுவதையும், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழப்பதையும் கண்டபிறகும் எந்த கவலையையும் இல்லாமல் மீண்டும் சீனர்கள் அச்சமின்றி கண்ட விலங்குகளையும் உண்பது பற்றி பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் சமூகவலைதளங்களில் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00