அமெரிக்‍காவில் கொரோனா உயிரிழப்பு 8 ஆயிரத்தை தாண்டியதால் அடுத்த 2 வாரங்களுக்‍கு மிகவும் எச்சரிக்‍கையுடன் இருக்‍கும்படி ட்ரம்ப் அறிவுறுத்தல் - ஹைட்ராக்சி குளோரோகுயின் ஏற்றுமதி தடையை தளர்த்த மோதியிடம் வேண்டுகோள்

Apr 5 2020 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவில் கொரோனா தொற்றால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை ஏற்றுமதிக்கான தடையை இந்தியா தளர்த்த வேண்டுமென பிரதமர் மோதியிடம் அமெரிக்‍க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ஹைட்ராக்‍கி குளோரோ குயின் மாத்திரைகள் கொரோனா சிகிச்சைக்‍கு பயன்படுவதாக வெளியான தகவலையடுத்து, அந்த வகை மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரையின்றி பயன்படுத்தக்‍கூடாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த மருந்தை மத்திய அரசு அட்டவணைப்படுத்தப்பட்ட மருந்து என்று அறிவித்து அதன் ஏற்றுமதிக்கும் தடை விதித்தது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோதியுடன் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் நேற்று பேசினார். இந்த பேச்சி குறித்து வெள்ளை மாளிக்கையில் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த டிரம்ப், ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ள மாத்திரைகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் பிரதமர் மோதியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு இம்மாத்திரை தேவை என்பதை தாம் அறிந்திருப்பதாகவும், எனினும் தாங்கள் கேட்ட அளவிலான மாத்திரைகளை அவர்கள் வழங்கினால் தாம் பாராட்டுவதாகவும் டிரம்ப் கூறினார். இதனிடையே அமெரிக்‍காவில் கொரோனா உயிரிழப்பு 8 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் அடுத்த 2 வாரங்களுக்‍கு எச்சரிக்‍கையுடன் இருக்‍கும்படி அந்நாட்டு மக்‍களுக்‍கு ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00