சீனாவிலிருந்து கடந்த ஜனவரி மாதத்தில் 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் அமெரிக்‍கா பயணம் - கொரோனாவை கட்டுப்படுத்த ட்ரம்ப் அரசு தவறிவிட்டதாக புகார்

Apr 5 2020 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் தோன்றிய ஜனவரி மாதத்தில் சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் சீனாவிலிருந்து அமெரிக்கா பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் குறித்து அமெரிக்கா பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு முன்பு சீனாவில் இருந்து அமெரிக்காவின் 17 நகரங்களுக்கு ஆயிரத்து 300 நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. கிட்டத்தட்ட 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் அமெரிக்காவிற்கு வந்துள்ளதாக பிரபல அமெரிக்க செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க், சிகாகோ உள்ளிட்ட விமான நிலையங்கள் வாயிலாக பெரும்பாலானோர் அமெரிக்காவிற்கு வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் வைரஸ் பரவத் தொடங்கிய வூகான் நகரிலிருந்து ஆயிரக்கணக்கானோர் நேரடியாக அமெரிக்காவிற்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் அமெரிக்க விமான நிலையங்களில் தீவிரமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. ஜனவரி 20-ம் தேதிக்குப் பின்னர் தான் அமெரிக்‍காவில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டதாகவும் இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விஷயத்தில் அமெரிக்கா அரசு மெத்தனமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00