கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனை தொடக்கம் - 100 தன்னார்வலர்களை சோதனைக்கு உட்படுத்த முடிவு

May 27 2020 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை சோதனை முறையில் பயன்படுத்தத் தொடங்கியுள்ள நொவாவாக்ஸ், ஒரு மாதகாலத்திற்குப் பின் முடிவுகள் தெரியவரும் என அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மேரிலாந்தில் செயல்படும் நொவாவாக்ஸ், கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் தடுப்பு மருந்தை சோதனை முறையில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. சுமார் 100 தன்னார்வலர்களுக்கு இந்த மருந்தைச் செலுத்தி, அதன் முடிவுகள் கிடைத்த பின், இந்த மருந்தைப் பயன்படுத்தினால் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியுமா என்பது தெரியவரும். இதற்கிடையே, கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதை உலக சுகாதார அமைப்பு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் Tedros Adhanom Ghebreyesus, இந்த மருந்தைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் முடிவுகள் தொடர்பான தகவல்கள் ஆராயப்பட்டு வருவதாகவும், இப்பணி நிறைவடைந்த பின்னரே, அதைப் பயன்படுத்தலாமா என்பது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00