சிங்கப்பூர் பொதுத்தேர்தலில் மீண்டும் ஆளும் கட்சி வெற்றி : வாக்கு சதவிகிதம் வரலாறு காணாத வீழ்ச்சி

Jul 12 2020 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிங்கப்பூர் பொதுத்தேர்தலில் பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான ஆளும் மக்கள் நடவடிக்கை கட்சி 93 தொகுதிகளில் 83 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் மீண்டும் ஆளும் கட்சி வெற்றிபெற்றுள்ளது. இருப்பினும் இம்முறை வரலாறு காணாத அளவுக்கு வாக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துதல் குறித்த அந்நாட்டு அரசின் நடவடிக்கைகளில் பொதுமக்களிடையே எழுந்த எதிர்ப்புக்களை எதிர்க்கட்சிகள் சரியாக அறுவடை செய்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின் இதுவரை தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றிபெற்று மக்கள் நடவடிக்கைக் கட்சி ஆட்சியைத் தக்கவைத்து வந்துள்ளது. இப்போது வெற்றிபெற்றதன் மூலம், பிரதமர் Lee Hsien Loong, மூன்றாம் முறையாக மீண்டும் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமது வெற்றி குறித்து கருத்து தெரிவித்த அவர், தெளிவான முடிவை எடுத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தாம் எதிர்பார்த்த அளவுக்கு இந்த வெற்றி அமையாதது ஒரு மிகப்பெரும் குறையாகவே தாம் கருதுவதாகத் தெரிவித்தார். அறுதிப்பெரும்பான்மை பெற்றதன் மூலம், அரசமைப்புச் சட்டத்தை மாற்றம் செய்வது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை ஆளும் கட்சி எளிமையாக மேற்கொள்ளமுடியும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00