உலக அளவில் கொரோனா பாதிப்பு 1 கோடியே 97 லட்சத்தை தாண்டியது : பலி எண்ணிக்கை 7 லட்சத்து 28 ஆயிரத்தை கடந்தது
Aug 9 2020 4:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக அளவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியே 97 லட்சத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 7 லட்சத்து 28 ஆயிரத்தை கடந்துள்ளது.
சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி, மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு, இதுவரை 51 லட்சத்து 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அடுத்தப்படியாக, பிரசிலில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர். இதேபோல், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, மெக்ஸிகோ, சிலி, பெரு, கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு பாதிப்பு ஒரு கோடியே 97 லட்சத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 7 லட்சத்து 28 ஆயிரத்தை கடந்துள்ளது. உலக அளவில் இதுவரை 1 கோடியே 27 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.