இலங்கையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு : நான்கு தமிழர்களுக்கு அமைச்சரவையில் இடம்

Aug 13 2020 10:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கையில் புதிய அமைச்சரவை நேற்று பதவி ஏற்றது. 4 தமிழர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அண்ணனும், முன்னாள் அதிபருமான மகிந்தா ராஜபக்சே பிரதமராக இருந்து வந்தார். 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சே சகோதரர்களின் இலங்கை மக்கள் கட்சி 145 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளுக்கு 5 இடங்கள் கிடைத்தன. இதைத்தொடர்ந்து, மகிந்தா ராஜபக்சே கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நாட்டின் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றார். அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று 28 கேபினட் மற்றும் 40 ராஜாங்க அமைச்சர்களை நியமித்தார்.

புதிய அமைச்சரவையின் பதவி ஏற்பு விழா கண்டி நகரில் நேற்று நடைபெற்றது. ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அமைச்சரவையில் இடம்பெற்று உள்ளனர். மகிந்தா ராஜபக்சேவின் மூத்த மகன் நமல் ராஜபக்சே இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார். அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா, அலி சப்ரி, சதாசிவம், வியாழேந்திரன், ஜீவன் தொண்டமான் ஆகிய 4 தமிழர்கள் இடம்பெற்று உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00