பாக்., பிரதமர் இம்ரானுக்கு எதிராக ஒன்றுகூடும் எதிர்க்கட்சிகள் - நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு

Sep 22 2020 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடியுள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் ஜாவித் பாஜ்வா எதிர்க்கட்சிகளுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன் ஷாப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். அவர் தேர்தலில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள், அவரை பதவி விலகும்படி வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசை உடனடியாக பதவி விலக வலியுறுத்தி, நாடு தழுவிய போராட்டத்தை நடத்த, எதிர்க் கட்சிகள் ஒன்றுகூடி திட்டமிட்டுள்ளன. இதுதொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் நேற்று முன்தினம் அனைத்து கட்சிகள் மாநாடு நடைபெற்றது.

இதில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்ற, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், இம்ரான்கான் அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும், பாகிஸ்தான் ராணுவம் அரசியலில் தலையிடக்கூடாது என்றும், வலியுறுத்தினார். இந்த நிலையில், ராணுவ தளபதி குவாமர் ஜாவித் பாஜ்வா மற்றும் உளவுத்துறை அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நடவடிக்கைகளில், ராணுவத்தின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர்களிடம் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் பாகிஸ்தான் அரசியலில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00