இஸ்ரேல் பிரதமருக்‍கு எதிரான வழக்‍கு விசாரணையில் தாமதம் - போராட்டக்‍காரர்களுக்‍கும் போலீசாருக்‍கும் இடையே மோதல்

Jan 13 2021 7:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
இஸ்ரேல் பிரதமருக்‍கு எதிரான ஊழல் வழக்‍கை விரைந்து விசாரிக்‍கக்‍ கோரி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது ஊழல், நம்பிக்‍கை துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்‍களின் பேரில் வழக்‍கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்‍கப்பட்டதால் வழக்‍கு விசாரணை தாமதப்படுத்தப்படுகிறது. இதைக்‍ கண்டித்து ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்களில் பலகட்டப் போராட்டங்கள் நடந்துவருகின்றன. ஜெருசலேமில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் முன் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தீ வைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர். அவர்களைக்‍ கைது செய்ய போலீசார் முயன்றபோது இருதரப்புக்‍கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 9 பேரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00