அமெரிக்காவின் 46-வது அதிபராக இன்று பதவியேற்கிறார் ஜோ பைடன் - தலைநகர் வாஷிங்டனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Jan 20 2021 11:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் இன்று பதவியேற்க உள்ளார்.

அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்பை ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தோற்கடித்தார். பைடனின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத ட்ரம்ப், பல்வேறு சதித்திட்டங்களில் ஈடுபட்டார். அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை இல்லாத நிகழ்வாக, தலைநகர் வாஷிங்டனில் உள்ள அந்நாட்டு நாடாளுமன்ற கட்டடத்திற்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து வாஷிங்டன் நகர் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டொனால்டு ட்ரம்பின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் இன்று பதவியேற்க உள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் பதவியேற்க இருக்கிறார். இதையடுத்து வாஷிங்டன் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஜோ பைடனின் அமைச்சரவையில் அமெரிக்க இந்தியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் வாஷிங்டனில், பாதுகாப்பு பணியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00