அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விதிமுறை மீறல் : யுரேனியம் செறிவூட்டல் 60 சதவீதமாக உயர்த்தப்படும் என ஈரான் எச்சரிக்கை

Feb 24 2021 10:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவுடனான ஒப்பந்தத்தின் விதிமுறையை மீறி யுரேனியம் செறிவூட்டல் 60 சதவீதமாக உயர்த்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.‌

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவுகிறது. இந்த சூழலில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுள்ளார். எனவே அமெரிக்கா மீண்டும் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு திரும்ப, ஜோ பைடன் நிர்வாகத்தை ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அணுசக்‍தி ஒப்பந்தத்திற்கு ஈரான் முழுமையாக இணங்கி நடந்தால், அந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவது பற்றி பரிசீலிக்‍கப்படும் என ஜோ பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தின் விதிமுறையை மீறி யுரேனியம் செறிவூட்டல் 60 சதவீதமாக உயர்த்தப்படும் என ஈரான் அரசின் மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.‌ அணுசக்தி ஒப்பந்தத்தின் படி ஈரான், யுரேனியம் எரிபொருளை 3 புள்ளி ஆறு ஏழு சதவீதத்துக்கும் மேல் செறிவூட்டக்கூடாது என்பது நிபந்தனை.‌‌ ஏற்கனவே இந்த நிபந்தனையை மீறிவிட்ட ஈரான் கடந்த மாதம் யுரேனியம் செறிவூட்டலை 20 சதவீதமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்‍கது.‌
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00