மியான்மரில் முதன்முதலாக நீதிமன்றத்தில் தோன்றிய ஆங் சான் சூகி : புதிதாக 2 வழக்குகளை ராணுவம் பதிவு செய்ததாக தகவல்

Mar 2 2021 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

மியான்மரில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய பின் முதன் முதலாக நீதிமன்றத்தில் தோன்றிய ஆங் சான் சூகியின் மீது மேலும் இரண்டு புதிய வழக்‍குகளை அந்நாட்டு ராணுவம் பதிவு செய்துள்ளது.

மக்‍களால் தேர்ந்தெடுக்‍கப்பட்ட தலைவர்களைக்‍ கடந்த மாதத் தொடக்‍கத்தில் கைது செய்த மியான்மர் ராணுவம், பின்னர் ஆட்சி அதிகாரங்களைக்‍ கைப்பற்றியதாக அறிவித்தது. இதையடுத்து, மக்‍களாட்சிக்‍கான தேசிய கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்‍கிய தலைவர்கள் வீட்டுக்‍காவலில் வைக்‍கப்பட்டதாக அறிவிக்‍கப்பட்டாலும் அவர்களது நிலை என்ன என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், முதன் முதலாக நீதிமன்றத்தில் காணொளி காட்சி வாயிலாக தோன்றிய ஆங் சான் சூகி, நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக முதன்முதலில் தெரியவந்துள்ளது. எனினும் அவர் மீது புதிதாக இரண்டு வழக்‍குகளை ராணுவம் தொடர்ந்துள்ள நிலையில், தமக்‍கு சட்ட நிபுணர்களைக்‍ கலந்து ஆலோசிக்‍க அனுமதியளிக்‍குமாறு கோரிக்‍கை விடுத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00