அமெரிக்க முன்னாள் துணை அதிபர் வால்டர் மண்டிலி காலமானார்
Apr 20 2021 12:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க முன்னாள் துணை அதிபர் வால்டர் மண்டிலி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 93.
அமெரிக்க அதிபராக ஜிம்மி கார்ட்டர் 1977 ஆண்டு முதல் 1981-ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த போது, துணை அதிபராக இருந்தவர் வால்டர் மண்டிலி. அமெரிக்காவின் 42-வது துணை அதிபராக பதவி வகித்த வால்டர், பில் கிளின்டன் அமைச்சரவையில் ஜப்பானுக்கான அமெரிக்க தூதராகவும் செயல்பட்டார். வயது முதிர்வு காரணமாக அரசியலை விட்டு விலகி இருந்த அவர், தனது 93-வது வயதில் காலமானார். வால்டர் மண்டிலி மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரீஸ், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, வால்டருடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.