அஃப்கனிஸ்தானில் அமைதி ஏற்படுமா? - தாக்குதல்கள் தொடர்வதால் மக்கள் கவலை

May 11 2021 2:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

அஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அஃப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் தாக்குதல்கள் அந்நாட்டு மக்களை கவலை அடைய செய்துள்ளன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரம் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி விமானங்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். உலகையே உலுக்கிய இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்கா படைகளால் கொல்லப்பட்டார். இதையடுத்து, அஃப்கனை தலைமையிடமாக செயல்படும் தாலிபான் தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்க அமெரிக்க நேட்டோ படைகள் கடந்த 2001ம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளாக அஃப்கானிஸ்தானில் தளம் அமைத்து தாலிபான்களை ஒழிக்க அந்நாட்டு அரசுக்கு ஆதரவளித்து வருகின்றன.

2009ம் ஆண்டு அமெரிக்க படைகளின் எண்ணிக்கையை ஒரு லட்சம் அளவுக்கு அப்போதைய அதிபர் ஒபாமா உயர்த்தினார். 2011லிருந்து அமெரிக்க படையினர் படிப்படியாக திரும்பப்பெறப்படுவார்கள் என ஒபாமா அறிவித்தார். இதனைத்தொடர்ந்து அஃப்கானில் நேரடி சண்டையில் ஈடுபடமாட்டோம் என அமெரிக்காவும், பிரிட்டனும் அறிவித்தன. இந்நிலையில், நீண்ட தடைகளுக்கு பிறகு 2020ம் ஆண்டு தோஹாவில் அமெரிக்காவும், தாலிபன்களுக்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி, அமெரிக்க படைகளை முழுமையாக திரும்பப்பெறுவது, தாலிபான்கள் - அஃப்கானிஸ்தான் அரசு ஆகியவை தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், செப்டம்பர் 11ம் தேதியின் தாக்குதலின் 20 ஆண்டு தினத்தையொட்டி பாதுகாப்பு கருதி அமெரிக்க படையின் ஒருபகுதி அஃப்கானிஸ்தானிலேயே இருக்கும் என தெரிவித்தார். அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு தாலிபான்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. தோஹா பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறினால் ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், மே 1ம் தேதி முதல் தங்கள் படையினரை திரும்பப்பெறப்படும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இதனிடையே, அஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அஃப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் தாக்குதல்கள் அந்நாட்டு மக்களை கவலை அடைய செய்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00