90 நாட்களாக விண்வெளியில் தங்கியிருந்த விஞ்ஞானிகள் வெற்றிகரமாக பூமிக்‍குத் திரும்பியதாக சீனா அறிவிப்பு

Sep 17 2021 6:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

விண்வெளிக்‍கு சீனா அனுப்பிய 3 வீரர்கள், 90 நாட்கள் பணிகளை முடித்துவிட்டு வெற்றிகரமாக பூமிக்‍குத் திரும்பினர்.

அமெரிக்‍கா, ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகள் இணைந்து விண்வெளியில் ஒரு சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தை நிறுவிப் பராமரித்துவருகின்றன. இதே போல் சீனாவும் தனியாக ஒரு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை பூமிக்‍கு வெளியில் நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக ஷென்ஷெள என்ற விண்கலனில் 3 ஆராய்ச்சியாளர்களை கடந்த ஜுன் மாதம் 17ம் தேதி விண்வெளிக்‍கு சீனா அனுப்பியது. இந்த ஆராய்ச்சியாளர்கள் Nie Haisheng, Liu Boming மற்றும் Tang Hongbo ஆகியோர் 90 நாட்களுக்‍குப் பின் அவர்களுடைய பணிகளை முடித்துவிட்டு வெற்றிகரமாக பூமிக்‍குத் திரும்பியுள்ளனர். திட்டமிட்டபடி அவர்களுடைய விண்கலன், நாட்டின் வடக்‍கு பகுதியில் உள்ள மங்கோலியப் பாலைவனப்பகுதியில் தரையிறங்கியது. அங்கிருந்து அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துவர சீன அரசு பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது என அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00