சூடானில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் - பிரதமர், அமைச்சர்கள் கைது - ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

Oct 27 2021 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

சூடானில் ஆட்சியை கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட ஆப்பிரிக்காவில் உள்ள சூடான் நாட்டில், பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி அரசு ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ, பிரதமராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், ராணுவம் திடீரென பிரதமர் மற்றும் அமைச்சர்களை கைது செய்துள்ளது. தலைநகர் Khartoum முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவ தளபதி அப்தெல் பத்தா பர்ஹன் தொலைக்காட்சியில் பேசியபோது, இடைக்கால அரசை கலைப்பதாக அறிவித்தார். 2023-ம் ஆண்டில் தேர்தல் நடைபெறும் வரை, ராணுவம் ஆட்சியில் இருக்கும் என அவர் திட்டவட்டமாக கூறினார். இதனையடுத்து, இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ராணுவ நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் டயர்களை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00