டுவிட்டர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் டோர்சி ராஜினாமா : புதிய சி.இ.ஓவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் நியமனம்

Nov 30 2021 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த Parag Agrawal, அமெரிக்க பங்குச்சந்தையில் உள்ள 500 நிறுவனங்களிலேயே, இளம் வயதிலேயே தலைமை செயல் அதிகாரியானவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Twitter நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்த Jack Dorsey, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக, ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்த பாரக் அகர்வால் புதிய CEO-வாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான, Parag Agrawal மும்பை ஐஐடியில் பயின்றவர். பின்னர் ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். 37 வயதான Parag Agrawal, அமெரிக்க பங்குச்சந்தையின் 500 நிறுவனங்களில், மிக இளம் வயது தலைமை செயல் அதிகாரி என்ற பெருமையை பெற்றுள்ளார். Meta நிறுவன சி.இ.ஓ.-வான Mark Zuckerberg-க்கும் 37 வயதானவர் என்றாலும், Parag Agrawal அவரைவிட சில மாதங்கள் இளையவர் என கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, ட்விட்டர் நிறுவனம் Parag Agrawal-லின் பிறந்த தேதியை வெளியிடவில்லை.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00