கொரோனா தொற்றைக்‍ தடுக்க முடியாமல் திணறும் வடகொரியா : தடுப்பூசிகள் வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்‍க அதிபர் பைடன் அறிவிப்பு

May 23 2022 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தொற்றால் சிக்‍கித் தவித்து வரும் வடகொரியாவுக்‍கு, கொரோனா தடுப்பூசிகள் வழங்க அமெரிக்‍கா தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் Joe Biden தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளை கொரோனா தொற்று, கடந்த 2 ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்த நிலையில், வடகொரியா தங்கள் நாட்டில் கொரோனா தொற்று இல்லை என கூறி வந்தது. ஆனால், தற்போது அந்நாட்டில் தொற்று பரவல் வேகமெடுத்துள்ளதால், கடந்த 12-ந் தேதி அதிபர் கிம் ஜாங் அன் நாடு முழுவதும் ஊரடங்கு பொதுமுடக்கத்தை அமல்படுத்தினார். வடகொரியா கொரோனா தடுப்பூசிகள் வேண்டாம் என்று தொடர்ந்து மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மூலிகை மருந்துகள் மூலம் தொற்றை குணப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தென் கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்‍க அதிபர் Joe Biden, அந்நாட்டு தலைநகர் சியோல் நகரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, வடகொரியாவுக்கு மட்டுமல்ல, சீனாவுக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்க அமெரிக்‍கா தயாராக இருப்பதாக தெரிவித்தார். உடனடியாக தடுப்பூசிகளை வழங்க தயாராக இருப்பதாகவும், ஆனால், இதுகுறித்து அந்த நாடுகளிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்‍கவில்லை எனவும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00