போர்க்‍குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் - சிங்கப்பூர் அரசுக்‍கு தென்னாஃப்ரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் குழு கோரிக்‍கை

Jul 26 2022 9:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

போர்க்குற்றங்களில் ஈடுபட்டு, சட்டவிதிமுறைகளை மீறிய, இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சிங்கப்பூர் அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என தென்னாஃப்ரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் குழு வலியுறுத்தி உள்ளது.

வரலாறு காணாத பொருளாதார சீரழிவுக்கு ஆளாகியுள்ள இலங்கையில், அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள், கொழும்பு நகரில் உள்ள அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக நுழைந்தனர். இதனையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன், இலங்கை விமானப் படை விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பியோடி, அங்கிருந்து சிங்கப்பூர் சென்று விட்டார்.

இந்நிலையில், தென்னாஃப்ரிக்காவைச் சேர்ந்த, International Truth and Justice Project என்ற, சர்வதேச மனித உரிமைகள் குழு, சிங்கப்பூரில் தங்கியிருக்கும் கோத்தபய ராஜபக்சேவை உடனடியாக சிங்கப்பூர் அரசு கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. சிங்கப்பூர் அரசு தலைமை வழக்கறிஞரிடம், தென்னாஃப்ரிக்க மனித உரிமைகள் குழுவின் வழக்கறிஞர்கள் அளித்துள்ள கிரிமினல் புகார் மனுவில், போர்க்குற்றங்களில் ஈடுபட்ட கோத்தபய ராஜபக்சேவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உச்சகட்ட போரின்போது, இலங்கை ராணுவ அமைச்சராக பதவி வகித்த கோத்தபய ராஜபக்சே, தமிழர்களுக்கு எதிராக பயங்கர போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக, 63 பக்க கிரிமினல் புகார் மனுவில், மனித உரிமைகள் குழு குற்றம் சாட்டியுள்ளது.

சர்வதேச விதிமுறைகள்படியும், சிங்கப்பூர் சட்டங்கள் அடிப்படையிலும், கோத்தபய ராஜபக்சே மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவரை சிங்கப்பூர் அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தென்னாஃப்ரிக்க மனித உரிமைகள் குழுவின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00