மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு - லண்டனில் வரலாறு காணாத பாதுகாப்பு

Sep 19 2022 8:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி, லண்டனில் இன்று நடைபெறுகிறது. உலகத் தலைவர்கள் பலரும் கலந்து கொள்வதால், லண்டன் மாநகரில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத், தனது 96-வது வயதில், கடந்த 8-ம் தேதி காலமானார். அவரது உடல், வரலாற்றுச் சிறப்புமிக்க, லண்டன் Westminster மண்டபத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. எலிசபெத்தின் உடலுக்‍கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு லண்டன் சென்றுள்ளார். அவர் எலிசபெத்து உடலுக்‍கு இந்திய நாட்டின் சார்பில் அஞ்சலி​ செலுத்தினார். ராணி எலிசபெத்தின் இறுதி நிகழ்வு, இன்று Westminster தேவாலயத்தில் நடைபெறுகிறது. இதற்கான, பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த இறுதி நிகழ்வில், இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00