ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாததால் போலீசார் தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் - அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிஜாப்பை தூக்கி எறிந்து பெண்கள் போராட்டம்

Sep 19 2022 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாததால் போலீசார் தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிஜாப்பை கழற்றி வீசி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய நாடான ஈரானில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க தற்போதைய அதிபர் இப்ராகிம் ரைசி, ஹிஜாப் போலீஸ் என்ற தனிப்படையை உருவாக்கி உள்ளார். இவர்கள் ஹிஜாப்பை சரியாக அணியாத பெண்களை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண்ணை, சரியாக ஹிஜாப் அணியாததால் போலீசார் கைது செய்தனர். காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், காவலர்கள் தாக்‍கியதில், தலையில் பலத்த காயம் அடைந்ததாகக்‍ கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் ஈரான் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால், வீட்டை விட்டு வெளியேறிய பெண்கள், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிஜாப்பை கழற்றி வீசி வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அதிபர் ரைசிக்கு எதிராக முழக்‍கங்கள் எழுப்பப்பட்டன. இஸ்லாமிய நாடான ஈரானில், பெண்கள் ஹிஜாபுக்‍கு எதிராக போராட்டத்தில் குதித்திருப்பது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00