வறுமை ஒழிப்புத் திட்டத்தை சீனா சிறப்பாகச் செயல்படுத்துகிறது : ஐ.நா. துணைப் பொதுச் செயலர் அமினா மொகமது பாராட்டு

Sep 21 2022 6:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

வறுமை ஒழிப்புத் திட்டங்களில் சீனாவின் நடவடிக்‍கைகளை ஐக்‍கிய நாடுகள் அமைப்பு பாராட்டியுள்ளது.

உலக அளவில் வறுமை ஒழிப்பு, அனைவருக்‍கும் கல்வி, பெண்களுக்‍கு எதிரான குற்றங்களைக்‍ குறைத்தல் உள்ளிட்ட நடவடிக்‍கைகளை மேற்​கொள்ள கடந்த இரண்டாயிரமாவது ஆண்டு ஐக்‍கிய நாடுகள் அமைப்பு உலகளாவிய இலக்‍குகளை நிர்ணயித்தது. இதனடிப்படையில் சீனாவின் செயல்பாடுகள் குறித்து ஐக்‍கிய நாடுகள் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் அமினா மொகமதுவிடம் கேள்வி எழுப்பபட்டது. இதற்குப் பதில் அளித்த அவர், வறுமை ஒழிப்பில் சீனாவின் நடவடிக்‍கைகள் மிகச் சிறப்பாகவும், ஆச்சரியப்படத்தக்‍க முறையிலும் இருப்பதாகப் பாராட்டியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் அந்நாட்டு அரசு கடைக்கோடி கிராமங்களின் முன்னேற்றத்தில் தொடங்கி, நகர்ப்புற முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் உள்கட்டமைப்பை உருவாக்‍குவது உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்திவருவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். இதற்கிடையே, வறுமையின் பிடியிலிருந்து, கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 80 கோடி மக்‍களை மீட்டு வளமான வாழ்க்‍கையை ஏற்படுத்தித் தந்திருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது. ​
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00