மேற்கு ஆப்பிரிக்காவில் 66 குழந்தைகள் உயிரிழப்புக்‍கு, இந்திய இருமல் மருந்தே காரணம் - உலக சுகாதார நிறுவனத்தின் தகவலால் புதிய சர்ச்சை

Oct 6 2022 1:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகளின் உயிரிழப்புக்‍கு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்கள் காரணமாக இருக்‍கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது குறித்து மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணை மேற்கொண்டுள்ளது.

காம்பியாவில் 66 குழந்தைகளின் உயிரிழப்பிற்கு, இந்தியாவின் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் 4 இருமல் மருந்துகளே காரணமாக இருக்‍கலாம் என உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. லிமிடெட் மூலம்மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த நான்கு மருந்துகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த தகவலால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்‍கத்தில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், சம்மந்தப்பட்ட நிறுவனத்திடமும், அதன் உயரதிகாரிகளிடமும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. இந்த மருந்து பொருட்கள் இதுவரை காம்பியாவில் மட்டுமே கண்டறியப்பட்டாலும், அவை மற்ற நாடுகளுக்கு விநியோகப்பட்டிருக்கலாம் என கூறியுள்ளது. எனவே அசம்பாவிதங்களை தவிர்க்க, அனைத்து நாடுகளும் இந்த தயாரிப்புகளை கண்டறிந்து அவற்றை புழக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதனிடையே, உலக சுகாதார நிறுவனத்தின் குற்றச்சாட்டு தொடர்பாக, மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணை மேற்கொண்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00