ட்விட்டர், மெட்டா நிறுவனங்களை தொடர்ந்து ஆட்குறைப்பு பணியில் களமிறங்கும் கூகுள் - ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் பணி நீக்கம் இருக்கும் என தகவல்...

Nov 23 2022 7:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆட்குறைப்பு நடவடிக்‍கையை மேற்கொள்ளும் நிறுவனங்களின் பட்டியலில் கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் எலான் மஸ்க்‍கின் ட்விட்டர் நிறுவனம் தனது பணியாளர்களின் எண்ணிக்‍கையைப் பாதியாகக்‍ குறைக்‍க நடவடிக்‍கை மேற்கொண்டது. இதனால், சுமார் 4 ஆயிரம் பணியாளர்கள் பாதிக்‍கப்பட்ட நிலையில், அமேசான் நிறுவனமும் இதே போன்ற நடவடிக்‍கையை மேற்கொண்டது. இந்நிலையில் உலக அளவில் இணையதள மற்றும் தேடுபொறி சேவைகளை அளித்து வரும் கூகுள் நிறுவனமும், சரியாகப் பணியாற்றாத பத்தாயிரத்துக்‍கும் மேற்பட்ட பணியாளர்களை வேலையை விட்டு நீக்‍கும் முயற்சியில் இறங்கியுள்ளது. நிதிச் சுமையைக்‍ குறைக்‍கவும், பணித்திறன்களை அதிகரிக்‍கவும் அந்நிறுவனம் இது போன்ற நடவடிக்‍கையில் இறங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே போல் உலக அளவில் செயல்படும் நிறுவனங்களில் இருந்து இந்த ஆண்டு மட்டும் சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் வீட்டுக்‍கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00