குடியுரிமை விவகாரத்தில் நேபாள துணைப் பிரதமருக்‍கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால் உடனடியாக பதவியிழந்தார்

Jan 28 2023 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை விவகாரத்தில் நேபாள துணைப் பிரதமருக்‍கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் அவர் உடனடியாக பதவியிழந்தார். நேபாள தொலைக்‍காட்சியில் பணியாற்றி, ஊழல் குறித்து பகிரங்கப் பிரச்சாரம் செய்த Rabi Lamichhane, மக்‍கள் ஆதரவுடன் புதுக்‍கட்சி தொடங்கி நாடாளுமன்றத் தேர்தலிலும் கணிசமான வாக்‍குகளைப் பெற்றார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்‍கப்பட்ட நிலையில், ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைத்து துணைப் பிரதமர் பதவியும் அளிக்‍கப்பட்டது. இதற்கிடையே, தன்னிடமிருந்த அமெரிக்‍க குடியுரிமையை கடந்த 2017ம் தேதி முறைப்படி ரத்து செய்யாததால் அவருக்‍கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்‍கு நடந்து வந்தது. இந்த வழக்‍கில் அவருக்‍கு எதிராக தீர்ப்பு அளிக்‍கப்பட்டதைத் தொடர்ந்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தானாகவே காலாவதியானது. இதையடுத்து துணைப் பிரதமர் பதவியையும் அவர் இழந்தார். சட்டப் படி செயல்பட்டிருந்தால் அவர் பதவியிழந்திருக்‍க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00