அமெரிக்‍க கறுப்பின இளைஞரை போலீசார் தாக்‍கிய அதிர்ச்சி வீடியோ வெளியானது - போக்‍குவரத்து விதிகளை மீறியதாக கூறி சரமாரியாக தாக்‍கியதால் 3 நாளில் உயிரிழந்த இளைஞர்

Jan 28 2023 1:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

போக்‍குவரத்து விதிகளை மீறியதற்காக 29 வயது கறுப்பின இளைஞரை அமெரிக்‍க போலீசார் சரமாரியாக அடித்து உதைத்த வீடியோ வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அமெரிக்‍காவின் டென்னசி மாகாணம் மெம்பிஸ் நகரை சேர்ந்தவர் 29 வயதான Tyre Nichols. கார் ஓட்டுநரான இவர், போக்‍குவரத்து விதிகளை மீறியதாக கூறி ஆறு அமெரிக்‍க போலீசார் சுற்றி வளைத்து தாக்‍கியுள்ளனர். அவரது தலை, முகத்தில் சரமாரியாக அடித்ததுடன் கீழே தள்ளி மிதித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ஜனவரி 7 ஆம் தேதி இந்த தாக்‍குதல் நடைபெற்றுள்ளது. அப்போது போலீசாரின் அடி தாங்காமல் அவர் Mom! என 3 முறை அலறியபடி மயங்கி விழுந்துள்ளார். கடுமையான தாக்‍குதலால் சிகிச்சை பலனின்றி ஜனவரி 10 ஆம் தேதி Tyre Nichols மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனை கண்ணீர் மல்க அவரது தாய் கூறி கதறியது காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது. இதற்கு முன் கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்‍க போலீசார் நடத்திய கொடூர தாக்‍குதலில் George Floyd என்ற கறுப்பின இளைஞர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00