விண்ணில் ஏவத் தயாராக இருக்‍கும் வடகொரிய ராணுவ உளவு செயற்கைக்‍கோள் : செயற்கைக்‍கோளை பார்வையிடும் அதிபர் கிம், அவரது மகள் மற்றும் ராணுவ அதிகாரிகள்

May 25 2023 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

வடகொரியாவின் முதல் ராணுவ உளவு செயற்கைக்‍கோள் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்து, விண்ணில் ஏவப்பட தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வடகொரிய அதிபர் Kim Jong Un, அவரது மகள் மற்றும் செயற்கைக்‍கோள் தயாரிப்புக்‍ குழுவினர் உள்ளிட்டோர், வடகொரியாவின் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தளத்தில், ராணுவ உளவு செயற்கைக்‍கோள் தொடர்பான பணிகளை பார்வையிடும் புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. செயற்கைக்‍கோள் தயாரிப்பு பணிகள் நிறைவு பெற்றுவிட்டதாகவும், அதனை விண்ணில் ஏவ, அதிபர் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் வடகொரிய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், அதற்கான தேதி வெளியிடப்படவில்லை. வடகொரியாவின் கிழக்‍குப் பகுதியில் இதற்காக புதிய ஏவுதளம் ஒன்று தயாராகி வருவதாகவும், இது பல நவீன வசதிகளைக்‍ கொண்டதாக இருக்‍கும் என்றும் வடகொரியாவின் ராணுவ நடவடிக்‍கைகளை கண்காணிக்‍கும் அமெரிக்‍க நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00