பூமிக்கடியில் 32 ஆயிரத்து 808 அடி ஆழத்திற்கு துளையிடும் பணியை தொடங்கிய சீன விஞ்ஞானிகள்... பூமியின் மேற்பரப்பிற்கு மேலேயும் கீழேயும் இடையேயான எல்லைகளை அறிய ஆராய்ச்சி

Jun 1 2023 10:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

பூமியின் மேற்பரப்பிற்கு மேலேயும் கீழேயும் இடையிலான புதிய எல்லைகளை ஆராயும் வகையில் பூமியில் 32 ஆயிரத்து 808 அடி ஆழத்திற்கு சீன விஞ்ஞானிகள் துளையிடத் தொடங்கியுள்ளனர். நாட்டின் எண்ணெய் வளம் மிக்க ஜின்ஜியாங் பகுதியில் இதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த துளை, 10-க்கும் மேற்பட்ட கண்ட அடுக்குகள் அல்லது பாறை அடுக்குகளை ஊடுருவிச் சென்று, பூமியின் மேலோட்டத்தில் உள்ள 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கிரெட்டேசியஸ் அமைப்பை அடையும். இந்த ஆராய்ச்சியானது கனிம மற்றும் ஆற்றல் வளங்களை அடையாளம் காணவும் நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற சுற்றுச்சூழல் பேரழிவுகளின் அபாயங்களை மதிப்பிட உதவும் என்று கூறப்படுகிறது. பூமியில் இதுவரை மனிதனால் உருவாக்கப்பட்ட ஆழமான துளை, ரஷ்யாவில் உள்ள 12 ஆயிரத்து 262 மீட்டர் கோலா சூப்பர் டீப் போர்ஹோல் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00