அமெரிக்க வெள்ளை மாளிகை வளாக வாயில் மீது காரை இயக்கி மோதிய நபர் : பாதுகாப்பு வளையத்தை மீறி வாகனத்தை மோதிய நபரை கைது செய்த அதிகாரிகள்
Jan 9 2024 3:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க வெள்ளை மாளிகை வாயில் மீது வாகனம் மோதிய சம்பவத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அமெரிக்க வெள்ளை மாளிகை வளாகத்தில் உள்ள வாயிலில் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த பாதுகாப்பை மீறி காரை இயக்கிய மர்நபர், திடீரென வெள்ளை மாளிகை வளாகத்தின் வாயில் மீது காரை மோதினார். இதனை கண்ட பாதுகாப்பு படையினர், ஓட்டுநரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.