எந்த நேரத்திலும் போர் வெடிக்கும் சூழலில், வடகொரியா ஆறாவது அணு குண்டு சோதனை நடத்த திட்டம் : ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியாவின் சிறப்பு பிரதிநிதிகள் ஆலோசனை

Apr 25 2017 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

எந்த நேரத்திலும் போர் வெடிக்கும் சூழலில், வடகொரியா ஆறாவது அணு குண்டு சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் சிறப்பு பிரதிநிதிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனைக்கு சர்வதேச நாடுகள் எச்சரிக்கை விடுத்தும் அந்நாடு அதிலிருந்து இம்மியும் பின்வாங்குவதாக தெரியவில்லை. தொடர்ந்து ஏவுகணைகளை ஏவி சோதனை ஈடுபட்டு வருகிறது. தற்போது 6-வது அணுகுண்டு சோதனையில் ஈடுபடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனிடையே, கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போர்க் கப்பல்கள் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில், தற்போதைய நிலவரம் குறித்தும், மேற்கொண்டு செயல்படுத்த வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் டோக்கியோவில் ஆலோசனை நடத்தினர்.

இதனிடையே, வடக்கு கொரியா ஆறாவதாக அணு குண்டு சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளதால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் புதிய தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00