அப்பாவி பொதுமக்கள் மீது ரசாயன குண்டு வீசி தாக்குதல் - சிரியா அரசு மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதித்து அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

Apr 25 2017 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

அப்பாவி பொதுமக்கள் மீது ரசாயன குண்டு வீசி தாக்குதல் நடத்திய சிரியா அரசு மீது அமெரிக்கா அதிரடியாக கூடுதல் பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் கடந்த 4-ம் தேதி அரசு படைகள் நடத்திய ரசாயன தாக்குதலில், கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதியில் நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 90 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரசாயன தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட விமானதளத்தை அமெரிக்கா ஏவுகணை வீசி தகர்த்தது. இந்நிலையில், ரசாயன குண்டு தாக்குதல் நடத்தியதற்காக சிரிய அரசு மீது புதிய பொருளாதார தடை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, 2014 - 15-ம் ஆண்டு நடத்தப்பட்ட ரசாயான தாக்குதலில், சிரியா அரசு அதிகாரிகள் 18 பேருக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00