அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா பதவி விலகிய 3 மாதங்களுக்குப் பிறகு சிகாகோ பல்கலைக்கழக விழாவில் பங்கேற்பு

Apr 26 2017 9:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, பதவி விலகிய 3 மாதங்களுக்குப் பிறகு, சிகாகோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார்.

அமெரிக்க அதிபராக, ஒபாமா கடந்த 8 ஆண்டுகளாக பதவி வகித்தார். தற்போது பதவி விலகிய அவர், தனது சொந்த ஊரான சிகாகோவில் தங்கியுள்ளார். புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின்னர், கடந்த ஜனவரி 20-ம் தேதி பதவி விலகிய அவர், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில், பதவி விலகிய 3 மாதங்களுக்குப் பிறகு சிகாகோ பல்கலைக்கழகத்தில் நடந்தவிழாவில் அவர் கலந்து கொண்டு, உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசினார்.

நம்பிக்கை தளராது எதிர்காலத்தை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை குறித்தும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் ஒபாமா பேசினார். மேலும் அமெரிக்காவுக்கு அடுத்த தலைமுறைக்கான புதிய தலைவர்களை உருவாக்க இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00