புற ஊதா ஒளி குறித்து ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய பிரம்மாண்ட பலூன் - பூமியிலிருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் அடி உயரத்தில் ஆகாயத்தில் பறந்தது

Apr 26 2017 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூசிலாந்திலுள்ள Wanaka தீவில் இருந்து, நாசாவின் புதிய கண்டுபிடிப்பான சூப்பர் பிரஷர் பலூன், பூமிக்கு மேலே காஸ்மிக் கதிர்கள் மற்றும் புற ஊதா ஒளி குறித்தும் ஆய்வுக்காக பறக்கவிடப்பட்டது. இது நூறு நாட்கள் வானில் பறந்து தகவல்களை சேகரித்து அனுப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசாவினால் ஒரு மைதானம் அளவில் தயாரிக்கப்பட்ட சூப்பர் பிரஷர் பலூன் சோதனை முறையில் நூறு நாட்கள் பறந்து, பூமி குறித்த தகவல்களை சேகரிப்பதற்காக விண்ணில் பறக்கவிடப்பட்டது.

இந்த பலூன், பூமிக்கு மேலே பறந்து, பூமியின் மேற்பரப்பில் உள்ள காற்றின் நைட்ரஜன் மூலக்கூறுகளுடன் இணைந்து ஒளிரும் புற ஊதா ஒளியை உருவாக்கும், ஆற்றல் மிகுந்த காஸ்மிக் கதிர்கள் குறித்தும், புற ஊதா ஒளி குறித்தும் ஆய்வு செய்து தகவல்களை அனுப்பும். நீடித்து உழைக்கக்கூடிய பாலி எத்திலீன் ஃபிலிம் கலவையால் இந்த உயர் அழுத்த பலூன் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தடிமன் குறைவானது என்றாலும் வலிமையானதாக இந்த பலூனின் மேற்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும், 18 புள்ளி 8 மில்லியன் கியூபிக் அடி கொள்ளளவு கொண்ட இந்த பலூன், பூமியில் இருந்து சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் அடி உயரத்தில் விண்வெளியில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஏழு முறை திட்டமிடப்பட்டு, மிக மோசமான வானிலை காரணமாக இந்த பலூன் விண்ணில் செலுத்தப்படுவது கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00